படிப்பது போல் நடிக்கக் கூடாது கிஷோர் குமார் அறிவுரை
படிப்பது போல் நடிக்கக் கூடாது கிஷோர் குமார் அறிவுரை
UPDATED : நவ 30, 2009 12:00 AM
ADDED : நவ 30, 2009 12:19 PM
அ நிறம் | அளவு
படிப்பது போல நடிக்க கூடாது. இப்படி செய்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதுடன், பெற்றோர்களையும் ஏமாற்றுவதாக அர்த்தம், என்று செயின்ட் ஜான்ஸ் ரெசிடென்ஷியல் சர்வதேச பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிஷோர்குமார் பேசினார்.
"ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில், செயின்ட் ஜான்ஸ் ரெசிடென்ஷியல் சர்வதேச பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிஷோர்குமார் பேசியதாவது:
வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்கும் தருணம் இது. இந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி, படிப்பில் ஜெயிக்க வேண்டும் என்ற துணிவை உங்களுக்கு ஏற்படுத்தும். தெளிவோடும், தைரியத் தோடும் தேர்வு எழுதுவீர்கள். தேர்வுக்கு இன் னும் 93 நாட்கள் உள்ளன. இந்த நாட்கள் மிக முக்கியமானது. உங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போவது இந்த நாட்கள் தான். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் களின் வழிகாட்டுதலை பின்பற்றி தேர்வு எழுதினால், நிச்சயம் தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று
வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது 2010 மார்ச் மாதம் எழுத இருக்கும் பொதுதேர்வு தான். இதை கவனத்தில் கொண்டு தேர்வு முடியும் வரை வீணாக பொழுதை கழிக்காமல் அத்தனை நேரத்தையும் படிப்பதற்காக செலவிடுங்கள். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டும்
தூங்குங்கள். மற்ற நேரங்களில் படிப்பே முக்கியமாக இருக்கட்டும்.
பாடத்தை புரிந்து கொண்டு படிக்க வேண் டும். படிப்பதைப் போல நடிக்க கூடாது. இப்படி செய்தால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதுடன், பெற்றோர்களையும் ஏமாற்றுவதாக அர்த்தம். படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். சோம்பேறித்தனம் கூடாது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனம் செலுத்தினால் படிப்பு ஆர்வம் தானாகவே வந்துவிடும்.
மாணவர்கள் வகுப்பறையில் பொறுப் பாக இருந்தால், பாடம் நடத்த ஆசிரியர்கள் நிறைய தகவல்களை தேடவேண்டியிருக்கும். பல ஆசிரியர்கள் இடமாற வேண்டியிருக்கும். இது பேச்சுக்காக பேசவில்லை. இப்பணியில், எனது 28 வருட அனுபவத்தால் சொல்கிறேன். படிப்பில் மாணவருக்கு முதலில் கிடைக்கும் முதல் சர்ட்டிபிகேட் பத்தாம் வகுப்பு சர்டிபிகேட் தான். இதற்கு முக்கியத்துவம் கிடைக்க, அதிகம் மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற, ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இவ்வாறு கிஷோர்குமார் பேசினார்.
