தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத்தேர்வு: பலனளிக்குமா பயிற்சி முகாம்கள்?

பிளஸ் 2 பொதுத்தேர்வு: பலனளிக்குமா பயிற்சி முகாம்கள்?

பிளஸ் 2 பொதுத்தேர்வு: பலனளிக்குமா பயிற்சி முகாம்கள்?


UPDATED : நவ 30, 2009 12:00 AM

ADDED : நவ 30, 2009 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2009 12:00 AM ADDED : நவ 30, 2009 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வரும் 2010 மார்ச் முதல் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்குகிறது. ஏழு லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


கடந்த கல்வியாண்டில் மூன்று லட்சத்து நான்காயிரத்து 900 மாணவர்கள்; மூன்று லட்சத்து 42 ஆயிரத்து 732 மாணவியர் என, ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் தேர்வெழுதினர். திருப்பூர் கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டில் 116 பள்ளிகளை சேர்ந்த 6,386 மாணவர் மற்றும் 7,626 மாணவியர் என, 14 ஆயிரத்து 22 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


கடந்த கல்வியாண்டில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 12 ஆயிரத்து 379 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,873 மாணவர் மற்றும் 6052 மாணவியர் என பத்து ஆயிரத்து 925 பேர் தேர்ச்சி அடைந்தனர்.திருப்பூர் கல்வி மாவட்டத் திற்கு மொத்தம் 88.3 சதவீதம் தேர்ச்சி கிடைத்தது. கடந் தாண்டை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக 1,652 பேர் தேர்வு எழுதுகின்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட, மாணவியரே அதிகளவில் தேர்வு எழுதுகின்றனர்.


தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை சார்பில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. ஜெய்வாபாய் பள்ளியில் கடந்த மாதம், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் வரவழைக் கப்பட்டு பயிற்சி அளிக்கப் பட்டது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் தோல்வி அடைவதை தவிர்க்கும் வகையில் தேர்வுக்கு தயார்படுத்துவது; எளிதாக மதிப்பெண் பெறும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


இப்பயிற்சியின் மூலம் கடந்த ஆண்டை விட, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும் என மாவட்ட கல்வி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.மாநில அளவில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகையை அரசு அதிகப் படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் 23ம் தேதி முதல் துவங்க, தற்காலிக அட்டவணையை அரசு தயாரித்துள்ளது.


மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) நடராஜன் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு, மாணவர்களை முழு மதிப்பெண் பெற வைப்பதற்கான பயிற்சி; சராசரிக்கும் குறைவாக மதிப் பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது, என பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. கடந்தாண்டு பொதுத் தேர்வில் ‘சென்டம்’ பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.


பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வழங்கப்படும் வினாத்தாள் தொகுப்பு புத்தகம் சென்னையிலிருந்து வரவழைக் கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் பாட வாரியாக ‘ஸ்லிப் டெஸ்ட்’ நடத்தப்படும். திருப்பூர் கல்வி மாவட்டம் துவங்கப்பட்டு முதல் ஆண்டில், கடந்தாண்டை விட தேர்வு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு பயிற்சி முகாம்கள் உதவும். இவ்வாறு நடராஜன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us