தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/50 கிராமங்களில் உயர்நிலைக்கல்வி வசதி இல்லை

50 கிராமங்களில் உயர்நிலைக்கல்வி வசதி இல்லை

50 கிராமங்களில் உயர்நிலைக்கல்வி வசதி இல்லை


UPDATED : டிச 07, 2009 12:00 AM

ADDED : டிச 07, 2009 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2009 12:00 AM ADDED : டிச 07, 2009 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வந்தவாசி தொகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் இல்லாததால், மாணவிகள் உயர்கல்வி பெற முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலம் உள்ளது. வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட ஆவணவாடி, சாத்தமங்கலம், வங்காரம், ஆராசூர், ஏரிப்பட்டு, அறுவதைத் தாங்கல், தாமரைப்பாக்கம், துணையாங்குப்பம், நாவல்பாக்கம், மீசநல்லூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் மட்டுமே உள்ளன.

சில கிராமங்களுக்கு அடிப்படை வசதியான சாலை மற்றும் பஸ் வசதி இதுவரை இல்லை. சில கிராமங்களுக்கு எப்போதாவது ஒரு நேரத்தில் மட்டுமே பஸ் வசதி உள்ளது. தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதியாகும்.
இப்பகுதி, மாணவர்கள் குறிப்பாக மாணவிகள், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் சூழல் உள்ளது. அதற்கு மேல் படிக்க வந்தவாசி, தெள்ளார் மற்றும் செய்யாறு போன்ற நகரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.


சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கிராமங்கள் கல்வி வளர்ச்சிக்காக பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. குறிப்பாக, 5 அல்லது 8ம் வகுப்பு வரை ஆர்வமாக படிக்கும் மாணவியர் உயர்நிலைக் கல்வியைப் பெற முடியவில்லை. காரணம், பல கி.மீ., தூரம் நடந்து சென்று படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது தான். மேலும், பஸ் வசதியும் போதுமானதாக இல்லாததால் மாணவியர் சொந்த செலவில் சென்று படிக்கும் பொருளாதார வசதியும் இல்லை.

இந்த கிராமங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் கூட முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"ஏழைகள் அதிகம் வசிக்கும் வந்தவாசி தொகுதியில் குறிப்பிடும் அளவிற்கு அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி வளர்ச்சி கேள்விக் குறியாக உள்ளது&' என்கின்றனர் ஆராசூர் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us