தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூடுதல் கட்டணம்: பள்ளி தாளாளர் விளக்கம்

கூடுதல் கட்டணம்: பள்ளி தாளாளர் விளக்கம்

கூடுதல் கட்டணம்: பள்ளி தாளாளர் விளக்கம்


UPDATED : டிச 07, 2009 12:00 AM

ADDED : டிச 07, 2009 02:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2009 12:00 AM ADDED : டிச 07, 2009 02:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

"கூடுதல் கட்டணம் குறித்து, பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது' என, குட் ஷெப்பர்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளியின் தாளாளர் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்திலேயே, கூடுதல் கல்விக் கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆறாவது ஊதியக் கமிஷனை, எங்களது பள்ளியில் கடந்த ஜூலை மாதமே அமல்படுத்தி விட்டோம். ஆனால், அதே மாதத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்தவில்லை.
 
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்கள் என, மொத்தம் 105 பேர் பணி புரிகின்றனர். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 43 ஆயிரம் ரூபாய் வரையிலும், புதிய ஊழியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் மாதச் சம்பளம் வழங்குகிறோம். முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை 6,200 ரூபாயும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 7,400 ரூபாயும், பிளஸ் 1க்கு 10 ஆயிரம், பிளஸ் 2க்கு 10 ஆயிரத்து 400 ரூபாயும் தான் வசூலிக்கிறோம். எங்களது பள்ளி வர்த்தக நோக்கு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தாளாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us