தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலநிலை மாற்றம்: இந்தியர்கள் ஆர்வம் ஆதிகரிப்பு

காலநிலை மாற்றம்: இந்தியர்கள் ஆர்வம் ஆதிகரிப்பு

காலநிலை மாற்றம்: இந்தியர்கள் ஆர்வம் ஆதிகரிப்பு


UPDATED : டிச 08, 2009 12:00 AM

ADDED : டிச 08, 2009 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2009 12:00 AM ADDED : டிச 08, 2009 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோரின் டாக்குமென்ட்ரி வெளியிடப்பட்ட பிறகு, 2007ம் ஆண்டில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு உச்சநிலையில் இருந்ததாக, நீல்சன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற ஆய்வு தெரிவிக்கிறது. புவி வெப்பமயமாதலால் 54 சதவீத இந்தியர்கள் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.


இந்த ஆய்வின்படி, கார்பன் வெளியாகும் அளவை குறைக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று 28 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். பத்தில் மூன்று இந்தியர்கள் குறைந்த கார்பனை வெளியிடும் மின் விளக்குகள், மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை ஆதரிக்கும் நிலையில், 25 சதவீதத்தினர் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்வதையும், மின்சாரத்தை சேமிப்பதையும் ஆதரிக்கின்றனர்.


பொதுமக்களின் போக்குவரத்து முறையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தனிநபர்களுக்கு உதவிகள் வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.


காலநிலை மாற்றத்தில் அதிக அக்கறை காட்டுவதில் உலகிலேயே  பிலிப்பைன்ஸ் நாட்டினர் முதலிடம் (78 சதவீதம்) பெறுகின்றனர். 66 சதவீத இந்தோனேசியா நாட்டினரும், தலா 62 சதவீத தாய்லாந்து மற்றும் மெக்சிகோ நாட்டினர் காலநிலை மாற்றத்தை பற்றி அறிந்துகொள்வதிலும், வெப்பத்தை குறைப்பதிலும் ஆர்வமுடன் உள்ளனர்.


இந்தியாவில் 62 சதவீதத்தினர் காற்று மாசுபாட்டையும், 61 சதவீதத்தினர் நீர் மாசுபாட்டையும் தடுக்க அதிக அக்கறை காட்டுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us