UPDATED : ஜூன் 13, 2023 12:00 AM
ADDED : ஜூன் 13, 2023 04:10 PM
நேற்று (ஜூன்.,12) உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நாளில் உலகின் பல இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க பல நாட்டு அரசுகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு விழிப்புணர்வுப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இன்று குழந்தைகள் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை வேலை வாங்குவோருக்கு எதிராக பல நாட்டு அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் குழந்தை கடத்தல், பாலியல் வன்முறைக்கெதிராகவும் இந்நாளில் குரல் எழுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.இந்நாளில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் WorldDayAgainstChildLabour2023 என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் தடுப்பு தினமாகக் கொண்டாடத் திட்டமிட்டது. இதனை அங்கீகரித்த ஐநா., 2021 ஆம் ஆண்டை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆண்டாகக் கொண்டாடி பெருமை சேர்த்தது. பெண் குழந்தைகளுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் நடக்கும் வன்கொடுமைகள், அடிமைத்தனம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஐநா., சார்பில் இந்நாளில் குரல் எழுப்பப்படுகிறது. நேற்று கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட உலக பிரபலங்கள் பலர் குழந்தைகள் கல்விக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
