UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 04:28 AM
நீட் தேர்வு மிகவும் தேவையான ஒன்று. அந்த தேர்வு கடினமானது அல்ல என்று நீட் தேர்வில் தேசிய அளவில்முதலிடம் பெற்ற மாணவர் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுடன் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் பிரபஞ்சன் சென்னை அசோக்நகரில் உள்ள தன் பெரியப்பா வீட்டில் தங்கி படித்து வந்தார்.அவர் அளித்த பேட்டி:
கடந்த ஆண்டுதான் பிளஸ் 2 முடித்தேன். தேர்வின் முதல் முயற்சியிலேயே இந்த வெற்றி கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் தாய் மாலா, தந்தை ஜெகதீஷ் இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். எனக்கு டாக்டர் ஆக வேண்டுமென்ற சிறுவயது கனவெல்லாம் கிடையாது. உயிரியல் பாடம் பிடிக்கும். அதை நன்றாக படித்தேன். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்.புதுச்சேரி ஜிப்மர் கல்லுாரி அல்லது டில்லி எய்ம்ஸ் கல்லுாரியில் படிக்க விரும்புகிறேன். முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்ற விரும்புகிறேன். நீட் மிகவும் சிறப்பான தேர்வு. இந்த தேர்வு நிச்சயம் தேவையான ஒன்றாகும். நீட் தேர்வு கடினமானது என்ற எண்ணத்தில் இருந்து வெளியே வர வேண்டும்.கடின உழைப்பு அதிக அளவு பயிற்சி என்பதுதான் வெற்றியை தரும்.இவ்வாறு அவர் கூறினார்.
