தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலையாளி இன சான்று கேட்டு போராட்டம்: பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்த மாணவர்

மலையாளி இன சான்று கேட்டு போராட்டம்: பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்த மாணவர்

மலையாளி இன சான்று கேட்டு போராட்டம்: பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்த மாணவர்


UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM

ADDED : ஜூன் 14, 2023 07:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM ADDED : ஜூன் 14, 2023 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பூர் மலையில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு எஸ்.டி., சான்று வழங்கக்கோரி பள்ளியை புறக்கணிக்கப் போவதாக மலையாளி மக்கள் நல சங்கத்தினர் அறிவித்து இது தொடர்பாக நோட்டீஸ் வினியோகித்தனர். இதனால் சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் தலைமையில் கடம்பூரில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டத்தில் குறைகளை எடுத்துக்கூறி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கிறேன் என்று தாசில்தார் கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத மலையாளி சங்கத்தினர் எஸ்.டி., சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். அதுவரை போராட்டம் தொடரும் என தாசில்தாரிடம் உறுதிபட தெரிவித்தனர். இதன்படி கடம்பூர் சுற்றுவட்டாரத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்,  பள்ளி, கல்லுாரிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us