UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 07:12 AM
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு ஏதுவாக படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திட இரண்டாவது சுற்று விண்ணப்பம் துவங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகியவற்றின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி வருகின்றது.இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது,அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் துவங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இணைய வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவுசெய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். விண்ணப்பங்களை 30.6.2023 இரவு 8:00 மணிவரை மட்டுமே பதிவுசெய்ய இயலும்.கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3,000 ஆகும். நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆகும். இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்தவேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்குறிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் திசை மற்றும் அதன் தகவல்களை முகவரி என்ற ஆண்டராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் வருவாய் கிராமந்தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். கிராமந்தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னிரிமை வழங்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ-சேவை மையம் உரிமம் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் நல்ல அறிவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-சேவை மைய கட்டடம் 100 ச.மீ.,க்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும். குறைந்தபட்சம் 2 எம்.பி.பி.எஸ்., அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்யவேண்டும்.தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும். மேலும் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்களுக்கு பதிவு எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். மேலும், அரசு விதிகளின் படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் அமைத்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
