UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 03:22 AM
அ நிறம் | அளவு
முதல் சர்வதேச யோகா போட்டி, தாய்லாந்தில் கடந்த மாதம் 29 ல் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற திருப்பூர் பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி மாணவர் தருண் முதல் பரிசு பெற்று வெற்றிக்கோப்பையை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யா, சக்திவேல், ஜாவித் ஆகியோரை பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் மனோகரன் பாராட்டினர். பள்ளி முதல்வர் சீனிவாசன் மாணவர் மற்றும் ஆசிரியர்களை கவுரவித்தார்.
