UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 07:44 AM
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் 36 மருத்துவ கல்லுாரிகள் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் பெயர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதற்கான லோகோவும் புதிதாக மாற்றப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லோகோவில், மருத்துவத்தை குறிக்கும் குறியீட்டுடன், தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என்ற வாக்கியமும், மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வாசகமும், லோகோவில் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து மருத்துவ கல்லுாரி முதல்வர்கள், துணை இயக்குனர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் வெளியிட்ட சுற்றறிக்கை:
அனைத்து மருத்துவ கல்லுாரி முதல்வர்களும், தங்கள் லெட்டர் பேடில் புதிய லோகோவை பயன்படுத்த வேண்டும். மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளுக்கான சான்றிதழ்களிலும், அவற்றை பயன்படுத்த வேண்டும். தொடர் மருத்துவ கல்வி நிகழ்வுகள், துறைசார் பிற நிகழ்வுகளிலும், இவற்றையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
