UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 05:43 PM
அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, கடந்தாண்டு செப்., முதல் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயலில் இருந்தது.இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு காலை உணவு திட்டம் நடை முறைக்கு வருகிறது. இதன்படி மாநகராட்சியில், 59 பள்ளிகளில் 8,238 பேர், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளில் 665 பேர் என 97 பள்ளிகளை சேர்ந்த 8,903 மாணவ-மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் நாளான்று பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. பிற நாட்களில் கோதுமை உப்புமா, சேமியா கிச்சடி, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கேசரி வழங்கப்படும்.
