படித்தவர்கள் எவ்வளவு அறிவுத்திறனுடன் இருக்கிறார்கள் என்பதில் கவனம் தேவை: ஆர்.என்.ரவி
படித்தவர்கள் எவ்வளவு அறிவுத்திறனுடன் இருக்கிறார்கள் என்பதில் கவனம் தேவை: ஆர்.என்.ரவி
UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 06:10 PM
அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 15வது இயந்திர கருவிகள் கண்காட்சி நடைபெற்றது . கவர்னர் ரவி இதை துவங்கி வைத்து, கண்காட்சியினை பார்வையிட்டார்.பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:
இந்த பூமியை இந்தியா தான் காப்பாற்ற வேண்டும். இந்தியாவால் தான் இந்த பூமியை காப்பாற்ற முடியும். தமிழகத்தில் மின்சாரம், சாலைகள், மனிதவளம் என சிறந்த உட்கட்டமைப்புகள் உள்ளன. இதனை முன்னேற்றத்துக்கு பயன்படுத்த நாம் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தவேண்டும். எல்லாரும் படித்துவிட்டார்கள் என்பதை விட அவர்கள் எவ்வளவு அறிவுத்திறனுடன் இருக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.வெளிநாடுகளுடனான நல்லுறவை பலப்படுத்தி தொழில்நுட்ப முன்னேற்ற காலத்தின் தாமதத்தை குறைத்தோம். அத்துடன் ஒரு குடிமகனுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் இருந்தது. அது சீராகக் கிடைக்கத் தேவையான திட்டங்கள் 9 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்துறை பிரிவில் தமிழகம் இந்திய மாநிலங்களில் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் சாலை வசதி, மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதால் தொழில்துறைகள் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
