தலைமை ஆசிரியர் இடமாற்றத்தால் 104 மாணவர்கள் ஆப்சென்ட்
தலைமை ஆசிரியர் இடமாற்றத்தால் 104 மாணவர்கள் ஆப்சென்ட்
UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 03:21 AM
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எடையார்பாக்கம் ஊராட்சியில், அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 135 மாணவர்கள் பயில்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவ, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் நேற்று முன்தினம் பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்கள், பெற்றோர், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் இந்த பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் நேற்று முன்தினம் எட்டு மாணவர்களுடன் பள்ளி இயங்கியது. இந்நிலையில் நேற்று 104 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர். மீதி 31 மாணவர்களுடன் பள்ளி இயங்கியது.
