தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணிதம் இனி கசக்காது, இனிக்கும்!

கணிதம் இனி கசக்காது, இனிக்கும்!

கணிதம் இனி கசக்காது, இனிக்கும்!


UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM

ADDED : ஜூன் 16, 2023 07:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM ADDED : ஜூன் 16, 2023 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கணிதப்பாடம் புரிந்து கொள்ளும் வரை கசப்பாகவே இருக்கும். புரிந்து கொண்டால் அதை விட இனிப்பு வேறு எதுவும் இல்லை. சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் வாயிலாக கணிதம் கற்றுத்தரும் பணிகளை துவக்கியுள்ளனர் ஆசிரியர்கள். வகுப்பறை போர்டில் கணக்குகள் கற்றுத்தரப்படும் அதே விதத்தில் கம்ப்யூட்டர் வாயிலாக மாணவர்கள் சுயமாகவும் எளிதாகவும் கணிதத்தை கற்றுக்கொள்ள ஆசிரியர்கள் பயிற்சியை வழங்குகின்றனர்.பள்ளித்தலைமை ஆசிரியர் மாலதி கூறியதாவது:தேசிய அளவில்,நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் போட்டித்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். முதற்கட்டமாக 6ம் வகுப்பு மாணவர்கள் 25, 7ம் வகுப்பு மாணவர்கள் 30, என மொத்தம் 55 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்காக எங்களிடம் மொத்தம் 30 கம்ப்யூட்டர்கள் உள்ளன. அதில் இதற்கான &'சாப்ட்வேர் &' பதிவிறக்கி கற்றுத்தரும் பொறுப்பை, தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us