UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 07:17 AM
விழுப்புரம்: இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.எஸ்.சி., செயற்கை நுண்ணறிவு என்ற புதிய பாடத்திட்டத்தை 2023-24 கல்வியாண்டில் துவங்கப்படுகிறது.செயற்கை நுண்ணறிவு என்பது பொதுவாக மனித நுண்ணறிவுக்குத் தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட கணினி அமைப்புகளின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இது வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். மேலும், அதன் தாக்கம் தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். மாணவர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதால் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிப் பாடத்தின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.செயற்கை நுண்ணறிவுத் துறை விரைவான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. 2026க்குள் இத்துறையில் பல வேலை வாய்ப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். இதனால் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியானது பி.எஸ்சி., செயற்கை நுண்ணறிவில் படிப்பினை வழங்குகிறது. இதில், சேரும் மாணவர்களுக்கு கணிசமான பலன்களை வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் Learn for Educators, Oracle Academy மற்றும் UI Path ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் மாணவர்கள் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையைச் சேர்ந்தவர்கள் பரந்த கற்றல் திறன், அனுபவங்கள், தொழில் சான்றிதழ்கள் மற்றும் வலைதள வாய்ப்புகளுக்கான அணுகுதலைப் பெறுவார்கள். இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியானது இரு பாலரும் பயிலும் வகையில் 2023-24 கல்வியாண்டில் பி.எஸ்சி., செயற்கை நுண்ணறிவு என்ற புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வகுத்துள்ள பாடத்திட்டத்திற்கு கூடுதலாக, தொழில்துறையுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மாணவர்கள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதாக, இ.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி சேர்மன் செந்தில்குமார் தெரிவித்தார்.
