UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 06:24 PM
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரியார் பல்கலையில், 21வது பட்டமளிப்பு விழா வரும், 28ல் நடக்க உள்ளது. அதில் பல்கலை வேந்தரான, தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து முதுமுனைவர் பட்டத்தை 4 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 505 பேருக்கும், பெரியார் பல்கலை துறைகள், இணைவு பெற்ற கல்லுாரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 பேருக்கு தங்க பதக்கத்துடன் பட்ட சான்றிதழை வழங்கி பேச உள்ளார். இதில் பெரியார் பல்கலை இணை வேந்தரான தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழக முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியும் பேச உள்ளனர்.மேடையில் கவர்னரிடமிருந்து பட்டங்களை பெற உள்ள, 608 மாணவர்களுடன் சேர்த்து சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லுாரிகளை சேர்ந்த 53 ஆயிரத்து 625 மாணவர்கள், பெரியார் பல்கலை துறைகளில் படித்த 1,076 மாணவர்கள், பெரியார் தொலைநிலைக்கல்வியில் படித்த 6,415 மாணவர்களும் பட்டங்களை பெறவுள்ளனர். இந்த விழா, பல்கலை இணையதளமான www.periyaruniversity.ac.in என்ற முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை பதிவாளர் தங்கவேல், தேர்வாணையர் கதிரவன், பேராசிரியர்கள், ஆட்சி குழு, ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
