தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஸ் வசதி இல்லை: அவதிப்படும் மாணவர்கள்

பஸ் வசதி இல்லை: அவதிப்படும் மாணவர்கள்

பஸ் வசதி இல்லை: அவதிப்படும் மாணவர்கள்


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3 முதல் 7 கி.மீ., தொலைவில் உள்ள் எக்ககுடி, பனைக்குளம், நல்லாங்குடி, கோகுலம் களக்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் கூட்டமாக நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் காலவிரயம் மற்றும் உடற்சோர்வால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.இது குறித்து எக்ககுடியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் முகம்மது கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் இருந்து உத்தரகோசமங்கைக்கு பஸ் வசதி இல்லாததால், நடந்தும் ஒரு சில மாணவர்கள் சைக்கிளிலும் வருகின்றனர். இதனால் அதிகாலையிலேயே எழுந்து பள்ளிக்கு கிளம்பி 7 கி.மீ., நடந்து சென்று வருகிறோம். எங்களது கோரிக்கையை ஏற்று பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்கு ஏற்றார்போல, சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us