தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலந்தாய்வு இன்றி நடக்கும் ஆசிரியர்கள் இடமாற்றம்

கலந்தாய்வு இன்றி நடக்கும் ஆசிரியர்கள் இடமாற்றம்

கலந்தாய்வு இன்றி நடக்கும் ஆசிரியர்கள் இடமாற்றம்


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 07:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் 1100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1.20 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் பயில்கின்றனர். எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களுக்காக 1328 விடுதிகள் உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தாண்டு கலந்தாய்வு நடந்த நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் இதுவரை நடக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். ஆனால் ரூபாய் பல லட்சங்களில், துறை உயர் அதிகாரிகளை கவனித்து பலர் மறைமுகமாக விரும்பிய பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவுகள் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.புதிய வகுப்பறைகள் கட்ட உத்தரவிட்டும் நிதி ஒதுக்கீடு இல்லை. விடுதிகள் பராமரிப்புக்காக ஒதுக்கிய ரூ.25 கோடியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை ஆசிரியர்கள் காப்பாளர் முன்னேற்ற சங்கம், ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கம், ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கம் மாநில நிர்வாகிகள் சங்கரசபாபதி, சுதாகர், விவேக் கூறியதாவது:
இத்துறை பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட 2021 ல் ரூ.100 கோடி ஒதுக்க உத்தரவிடப்பட்டது. இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரையில் செம்பியாநனேந்தல் பள்ளி உட்பட பெரும்பாலான பள்ளிகளில் மரத்தடியில் தான் மாணவர்களை அமர வைத்துள்ளனர். விடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. தென்காசி, தேனி, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நிதியை செலவிட்டதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடக்கிறது. 2021க்கு பின் இத்துறை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை.ஆனால் துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. பணிநிரவலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எட்டு ஆண்டுகளாக இத்துறை ஒட்டுமொத்த அதிகாரத்தையும் சென்னை இயக்குனர் அலுவலகம் எடுத்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் டம்மியாக உள்ளனர். இப்போக்கை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்படவுள்ளது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us