UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 07:02 AM
அ நிறம் | அளவு
தென்மண்டல நாடார் பேரவை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பிறகு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு, கல்வி ஊக்கத் தொகையும் வழங்கினார்.பனை கூட்டுறவு சங்க இயக்குனர் துரை சிங்கம், கழக பொருளாளர் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாவட்ட வர்த்தக அணி தலைவர் பொற்கோ ரஞ்சித், மாணவரணி தலைவர் அஸ்வின், முருகதாஸ், ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை நிர்வாகிகள் ஜெகன், ஜார்ஜ், மகளிர் அணி நிர்வாகிகள் மஞ்சுளா, பாண்டிய ராணி பங்கேற்றனர். இளைஞர்கள் பலர் நாடார் பேரவையில் இணைந்தனர்.
