பதவி உயர்வுக்கு பின்னேற்பு அனுமதி: பல்கலை பேராசிரியர்கள் அதிருப்தி
பதவி உயர்வுக்கு பின்னேற்பு அனுமதி: பல்கலை பேராசிரியர்கள் அதிருப்தி
UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 07:06 AM
ல்கலையின் துணைவேந்தருக்கு இணையான அதிகாராத்தை கொண்டது சிண்டிகேட், செனட் குழு. எவ்வித முடிவுகள் எடுத்தாலும், இக்குழுவின் பார்வைக்கு சமர்ப்பித்து, ஒப்புதல் பெறவேண்டியது கட்டாயம். ஆனால், சமீப காலங்களில் பாரதியார் பல்கலையில், அடிப்படை விஷயங்களுக்கு கூட பின்னேற்பு அனுமதி பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.கடந்த மூன்று தினங்களுக்கு முன் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்திய பின் பின்னேற்பு அனுமதிக்கு சமர்ப்பித்து இருந்ததாக உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், பின்னேற்பு அனுமதி என்பது, அவசர காலங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே பெறவேண்டும். பதவி உயர்வு, இயந்திரங்கள் கொள்முதல், புதிய திட்டங்கள் செயல்படுத்துதல், பாடத்திட்டங்களுக்கு அனுமதி அளித்தல் என அடிப்படை விஷயங்களுக்கு கூட, தற்போதைய பொறுப்பு குழுவினர் பின்னேற்பு அனுமதிக்கு சமர்ப்பிக்கின்றனர். இதில் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் வழங்கப்பட்ட, பின்னேற்பு அனுமதியை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்றார்.
