பெண் குழந்தைகள் படிப்பு: விழிப்புணர்வு பிரசார பயணம்
பெண் குழந்தைகள் படிப்பு: விழிப்புணர்வு பிரசார பயணம்
UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 05:59 PM
சாயிபாபா காலனியைச் சேர்ந்த சைக்கிளிஸ்ட் விஷ்ணுராம், பெண் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்தார்.இதன் தொடர்ச்சியாக நமது நாட்டின் நான்கு திசைகளையும் இணைக்கும் விதமாக, ரவுண்ட் டிரிப் முறையில் கார் பயணம் மேற்கொண்டார். சென்னையில் மே 28ம் தேதி கார் பயணத்தை ஆரம்பித்தார்.மேற்குப்பகுதியான அருணாச்சல பிரதேசம் தேஜு சென்றார். அங்கிருந்து வடக்கு நோக்கி காஷ்மீர் லடாக் சென்ற அவர் கிழக்கு எல்லையான குஜராத் மாநிலம் கோட்டேஸ்வர் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரி சென்று ஜூன் 7ல் சென்னை திரும்பினார். மொத்தம், 10 நாட்கள் மற்றும், 16 மணி நேரம் ரவுண்ட் டிரிப் பயணம் செய்திருக்கிறார். 16 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி, 12 ஆயிரத்து 226 கிலோ மீட்டர் துாரம் பயணித்த விஷ்ணு ராம் குறைந்த நேரத்தில் இந்தியாவின் நான்கு எல்லைகளையும் கார் பயணத்தில் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றிருக்கிறார்.இவருக்கு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலையில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இப்பயணம் மூலமாகவும், நண்பர்கள் உதவியுடனும் திரட்டிய 6 லட்சம் ரூபாயை கலெக்டரிடம் காசோலையாக விஷ்ணு ராம் வழங்கினார். பெண்கள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தில் இத்தொகையை செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நான்கு எல்லைகளையும் சைக்கிளில் கடக்க திட்டமிட்டு இருப்பதாக விஷ்ணுராம் தெரிவித்துள்ளார்.இனியும் வேண்டாமே!
விஷ்ணுராம் கூறுகையில், பெண் கல்வி விழிப்புணர்வுக்காக இப்பயணம் மேற்கொண்டேன். நாட்டின் நான்கு எல்லைக்கும் சென்று வந்திருக்கிறேன். இதற்கு முன் வேறொருவர் 401 மணி நேரத்தில் சென்றுள்ளார். நான் 256 மணி நேரத்தில் இப்பயணத்தை மேற்கொண்டு முந்தைய சாதனையை முறியடித்துள்ளேன். வடகிழக்கு பகுதிகளில் பெண்களுக்கு கல்வி போதிப்பதன் அவசியத்தை உணராமல் இருக்கின்றனர். 16 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும், என்றார்.அரைத்துாக்கம், அலைச்சல் 30 முதல் 35 மணி நேரம் வரை, சில நேரம் துாங்காமலும், நாளொன்றுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொண்டும், கரடு முரடான சாலை, ராஜஸ்தான் புழுதி, அருணாச்சல பிரதேச குளிர், காஷ்மீர் பனி என பல்வேறு கால சூழ்நிலைகளையும், தட்ப வெப்ப நிலைகளையும் விஷ்ணு ராம் எதிர்கொண்டு, கடும் சவால்களுடன் இந்த சாகச கார் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
