தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இசை தான் என் அடையாளம்-பி.டெக்., பட்டதாரி

இசை தான் என் அடையாளம்-பி.டெக்., பட்டதாரி

இசை தான் என் அடையாளம்-பி.டெக்., பட்டதாரி


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.டெக்., ஐ.டி., பட்டதாரியான இவர் சொந்தமாக தானே பாடல்கள் எழுதி அவற்றுக்கு இசையமைத்து மேடையில் இசைக்கருவிகளுடன் பாடும் திறமை பெற்றவர். 2016 முதல் இசைத்துறையில் பயணிக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் விஜய், தொடக்க காலத்தில் இசைக்குழுக்களில் பணியாற்றியவர். இப்போது தனியாக பாடல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.காதால் கேட்கும் எந்த ஒரு ஒலியையும், இசைக்கருவி மூலம் உருவாக்கி விடுபவரே ஒரு நல்ல இசையமைப்பாளர். அந்த வகையில் நானும் ஒரு இசையமைப்பாளர் தான். நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். கிடார், குரல் இசையில் நிபுணத்துவம் கொண்டிருக்கும் தன்னிடம், ராக், ஹிப்காப் உள்ளிட்ட வெவ்வேறு இசை வடிவங்களின் தாக்கமும் இருக்கிறது என்கிறார் விஜய். ஏராளமான பாடல்களையும், இசைக்கோர்வைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பாடல்கள் எழுதும் இவர்,இசைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான, இசைக்கோர்வைகளையும் தயார் செய்து வைத்திருக்கிறார். மரபு சாராத தாளநடையை, தன் இசையில் பயன்படுத்துவதாக கூறும் விஜய், பி.டெக்., ஐ.டி., படித்திருந்தாலும் இசை தான் என் அடையாளம், என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us