முதலில் கல்லூரியை தேர்வு செய்யுங்கள்: ரைமண்ட் உத்தரியராஜ் அறிவுரை
முதலில் கல்லூரியை தேர்வு செய்யுங்கள்: ரைமண்ட் உத்தரியராஜ் அறிவுரை
UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 01:04 PM
விழுப்புரத்தில் நேற்று நடந்த தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் முன்னாள் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை அரசு வெளிப்படைத் தன்மையோடு நடத்தி வருகிறது. இன்ஜினியரிங் சேர்க்கையில் உரிய பாட பிரிவு, கல்லுாரியை பெற முதலில் தேர்வு செய்து தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும். அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், மத்திய அரசின் கல்லுாரிகளில் உள்ள படிப்புகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், கல்லுாரிகளின் தர நிலை குறித்து, முன்பே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கல்லுாரிகளுக்கு நேரில் சென்றோ அல்லது அந்த கல்லுாரியில் படித்த மாணவர்கள், நண்பர்கள் மூலம் அதன் நிலையை கேட்டு தெரிந்து இருக்க வேண்டும். வெப்சைட்டிலும் கல்லுாரிகளின் தர நிலைகள் வழங்கப்பட்டிருப்பதைப் பார்க்க வேண்டும். குறிப்பாக மரைன் இன்ஜினியரிங் படிக்க, முன்கூட்டியே மருத்துவ சான்றிதழ் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிலும், பொது ஒதுக்கீடிலும் பங்கேற்க முடியும். கட் ஆப் மதிப்பெண் வைத்து ரேங்க் பட்டியில் வெளியிடப்படும். உங்களுடைய ரேங்க் அடிப்படையில் கவுன்சிலிங் தேதி போன்றவற்றை கவனமாக பார்க்க வேண்டும். கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு முன், அதிகபட்சமாக 10 கல்லுாரிகளைத் தேர்வு செய்து வைத்திருந்தாலே போதுமானதாகும். நீங்கள் தேர்வு செய்யும் பாட பிரிவு, கல்லுாரிகளின் கடந்த 5 ஆண்டு கால தகுதி நிலை, தரத்தை கேட்டறிய வேண்டும்.ப்அந்த கல்லுாரியின் பேராசிரியர்கள், முதல்வர், போன்றவர்கள் நீண்ட காலம் கல்லுாரியில் பணியாற்றுகிறார்களா என்பதை தெரிந்தால் எளிது. 90 சதவீதம் மாணவர்கள் வேலை வாய்ப்புக்கு போக வேண்டும் என படிப்பதால், பிளேஸ்மெண்ட் நிலை அவசியம். 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் எடுத்தால் அதில் 30 சதவீதம் பேர்தான் வேலைக்குச் செல்கின்றனர். அதனால் தரமான திறமையான படிப்பு அவசியம். கல்லுாரிகளின் தரச் சான்று போன்றவற்றையும் வெப்சைட்டில் கவனிக்க வேண்டும். உங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்டை யாரிடமும் வழங்கக் கூடாது. உங்கள் தேர்வு லிஸ்ட்டை வைத்துக்கொண்டு, கவுன்சிலிங் போது நன்றாக யோசித்து, பின் கல்லுாரியை தேர்வு செய்து லாக் செய்ய வேண்டும். 5 நாட்களுக்குள் அந்த கல்லுாரியில் சேர்ந்து விட வேண்டும். இல்லை எனில் 6வது நாள் காலி இடமாக அறிவிக்கப்பட்டு விடும். ஒரு கல்லுாரியையும் பாட பிரிவையும் நீங்கள் தேர்வு செய்து விட்டீர்கள் எனில் அதுவே சிறந்த கல்லுாரி. அதுவே சிறந்த படிப்பு என்பதை மனதில் வைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரியராஜ் பேசினார்.
