UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 12:22 PM
ஆண்டுதோறும், ஜூன் 21ல் உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 2015 ஜூன் 21ல் முதன் முறையாக சர்வதேச அளவில், யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகாவின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பலரும் தங்களின் மன அழுத்தம், உடல் திறனுக்காக யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளனர். பள்ளி, கல்லுாரிகள், நிறுவனங்கள் என, பல இடங்களில் யோகா தினம் கொண்டாடுகின்றனர்.இது குறித்து கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பட்டப்படிப்பு கல்லுாரிகள் உட்பட அனைத்து கல்லுாரிகளிலும் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.யோகாவின் மகத்துவம், அதன் பயன்கள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யோகா தின நிகழ்ச்சிகளின் படங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
