தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோடிகளில் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டணம்

கோடிகளில் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டணம்

கோடிகளில் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டணம்


UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM

ADDED : ஜூன் 20, 2023 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM ADDED : ஜூன் 20, 2023 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தற்போது அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல், இடைப்பருவ தேர்வுகளுக்காக வினாத்தாள் அச்சடிப்புக்காக ஆறு முதல் எட்டாம் வகுப்பில் ரூ.50 முதல் ரூ.70, ஒன்பது, பத்தாம் வகுப்பில் ரூ.70 முதல் ரூ.110, மேல்நிலையில் ரூ.100 முதல் ரூ.150 வரை ஒவ்வொரு மாணவரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கல்வி அதிகாரிகள் சிலர் அனுமதியுடன் வினாத்தாள் அச்சடிக்கும் பொறுப்பை அரசியல் பின்னணியில் தனியார் நிறுவனங்கள் பெற்று, மாவட்டம் வாரியாக அச்சகங்களுக்கு சப் கான்ட்ராக்ட் விடுகின்றன. இந்த வகையில் ஆண்டுதோறும் ரூ.75 கோடி வரை வினாத்தாள் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்தாண்டு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் அனைத்து அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கும் எல்காட் மூலம் பிரின்டர்கள் வழங்கப்பட்டன. ஏ4 சைஸ் பேப்பர் கொள்முதல் செய்யவும் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் அந்தந்த பள்ளிக்கு இமெயில் மூலம் அனுப்பப்படும் வினாத்தாள் பக்கங்களை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது.பெற்றோர், ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளி என்றால் ரூ.50 பி.டி.ஏ., கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் வினாத்தாள், தேர்வுக்கு பேப்பர், சிறப்பு கட்டணம், கொடி வசூல் என மாணவர்களிடம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இதில் வினாத்தாள் கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. இக்கல்வியாண்டு முதல் இக்கட்டணத்தை ரத்துசெய்ய கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவிட வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us