UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 01:06 PM
ஹரிபிரியா, ரிஷிவந்தியம்:
இன்ஜினியரிங் படிப்பதற்கு தேவையான அடிப்படை அறிவுரைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எனக்கு கிடைத்தது. சரியான கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி? வேலை வாய்ப்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்படிப்பு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் தற்போதுள்ள நடைமுறைகளை அறிந்து கொள்வதும், பாட பிரிவு, கல்லுாரியை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டேன். தினமலர் நாளிதழ் கல்விப் பணிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அபிநயா கமலி, பகண்டை கூட்ரோடு:
இன்ஜினியரிங் துறையில் பிரகாசிப்பது எப்படி என்பதை தினமலர் நாளிதழ் வாயிலாக அறிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எந்த படிப்பு எடுத்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலைக்கு படிக்க வேண்டும் என்றால் சிவில் படிக்கலாம் என அறிவுரை வழங்கியது நன்றாக இருந்தது. எந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எந்தெந்த கல்லுாரிகள் கிடைக்கும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.அஜய் அரவிந்த், விழுப்பும்:
பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லுாரி படிப்புக்கு அடி எடுத்து வைக்கும் எங்களுக்கு அரவணைப்புடன் வழங்கிய அறிவுரைகள் சிறப்பாக இருந்தது. கல்லுாரியில் சேர்ந்து படித்தால் மட்டும் போதாது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய படிப்புகள் என்னென்ன என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.பரமேஸ்வரி, விழுப்புரம்:
ஐடி துறையில் பிரகாசிக்கும் படிப்புகள் பற்றி அறிந்து கொண்டேன். உற்பத்தி துறைக்கும் சர்வீஸ் துறைக்கும் இடையே உள்ள சம்பள வேறுபாடுகளை தெளிவாக அறிந்து கொண்டேன். அதற்கு ஏற்றாற் போல் நம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. தினமலர் நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அமிர்த தர்ஷினி, திருக்கோவிலுார்:
இன்ஜினியரிங் துறையில் வேலை வாய்ப்புகள் மிகுந்த துறைகள் எது என்பது தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லுாரிக்குச் செல்லும் காலத்தில் இந்த நிகழ்ச்சி தினமலர் நாளிதழ் வாயிலாக அறிந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது. இங்கு கருத்துகள் கூறிய கல்வியாளர்கள் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து தெளிவாக கூறினார்கள்.பொற்செல்வன், நெய்வேலி:
பொறியியல் படிப்பதற்கு தேவையான நல்ல ஆலோசனைகளை தினமலர் நாளிதழ் வாயிலாக அறிந்து கொண்டேன். இன்ஜினியரிங் படிப்புகளால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எந்த கல்லுாரியில் எந்த பாட பிரிவில் சேரலாம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. கவுன்சிலிங்கில் எப்படி கல்லுாரிகளை தேர்வு செய்வது. சாய்ஸ் பில்லிங் முறையும், கூடுதலாக எந்த கோர்ஸ் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்பதை மட்டுமின்றி கல்லுாரிகளின் தர வரிசை குறித்தும் அறிந்து கொண்டேன்.
