UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM
ADDED : ஜூன் 21, 2023 04:56 AM
சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலை இணைந்து, சான்றிதழ் பட்டப்படிப்பை துவக்க உள்ளன. அதன்படி, ராமச்சந்திராவின் கேட்பியல், பேச்சு மற்றும் மொழித்துறையில், இப்படிப்பு துவங்கப்படுகிறது. பேச்சு மற்றும் மொழி பயிற்சி இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களும், இசை பல்கலை மாணவர்களும், கூட்டாக இரண்டு இடங்களிலும், நேரடி வகுப்பிலும், இணைய வழியிலும் பயிற்சி பெறுவர்.இதில், குரல் வளம் நலன், பாதுகாப்பு, பாடும் திறமை மேம்பாடு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ராமச்சந்திரா பல்கலை துணைவேந்தர் உமா சேகர், இசை பல்கலை துணை வேந்தர் சவும்யா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
