தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு நிபுணர்களை நியமிக்க கோரிக்கை

சிறப்பு நிபுணர்களை நியமிக்க கோரிக்கை

சிறப்பு நிபுணர்களை நியமிக்க கோரிக்கை


UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM

ADDED : ஜூன் 21, 2023 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM ADDED : ஜூன் 21, 2023 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் அரசு மருத்துவக்கல்லுாரியுடன் இணைந்த மருத்துவமனைகள் உள்ளன. மதுரை, திருநெல்வேலி இரண்டு பழமையான மருத்துவக் கல்லுாரிகள். மற்ற கல்லுாரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை. தலையில் அடிபட்டால் நரம்பியல் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆய்வு செய்ய வேண்டும். முகத்தில் அடிபட்டு தசை, எலும்புகள் பிய்ந்திருந்தால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள பிரச்னை என்றால் வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இருதய பிரச்னைக்கு கார்டியோ தொராசிக் வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணர்களின் பரிந்துரை அவசியம்.பொன்னான நேரம் வீணாகிறது
மதுரை, திருநெல்வேலி தவிர தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கல்லுாரிகளில் இத்துறையில் எம்.சிஎச்., சிறப்பு பட்டம் பெற்ற நிபுணர்கள் இல்லை. இதனால் விபத்தில் அடிபடும் நோயாளிகளின் பொன்னான நேரம் வீணாகிறது. தலையில் அடிபட்டு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நோயாளிக்கு உடனடியாக சிகிச்சை தொடங்க வேண்டும். பிற மாவட்டங்களில் இருந்து இங்கு கொண்டு வரும் போது தாமதமாகிறது. ரத்தக்கசிவு அதிகமாவதற்கும் ரத்தக்கட்டி உருவாவதற்கும் வாய்ப்புள்ளது.நோயாளியின் உயிர்பிழைக்கும் வாய்ப்பும் பறிபோகிறது
இதுபோன்றே மற்ற சிறப்பு துறைகளிலும் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் எம்.சிஎச்.முடித்த சிறப்பு நிபுணர்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் அரசு விரைவில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us