UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM
ADDED : ஜூன் 22, 2023 09:45 AM
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பதற்குள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. வழக்கமாக அரசு பள்ளிகளுக்கு முடிந்த சில நாட்களில் மாநகராட்சி பள்ளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு பள்ளிகள் திறப்பு தாமதம், கமிஷனர் மாற்றம் போன்ற காரணங்களால் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் பிரபாகரன் கூறுகையில், மாநகராட்சிக்கு உட்பட்டு 15 மேல்நிலை, 9 உயர்நிலை உட்பட 64 பள்ளிகள் உள்ளன. 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தலைமையாசிரியர், பி.ஜி., ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இப்பணியிடங்களையும் நிரப்பவும், மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கவும் கமிஷனர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
