தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சவுதியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

சவுதியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

சவுதியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா


UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM

ADDED : ஜூன் 23, 2023 04:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM ADDED : ஜூன் 23, 2023 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சவுதி அரேபியா:
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் ஜெத்தா தமிழ்ச் சங்கம் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து ஊக்குவிப்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.அதை பின்பற்றி இந்த வருடம் ஜூன் 20 தேதி சாதனை படைத்த மாணவ மாணவியர்களை பாராட்டும் விழா ஜெத்தா லக்கி தர்பார் உணவக அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை ஜெய்சங்கர் தொகுத்து வழங்க, காஜா மொஹிதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய பன்னாட்டு பள்ளி துணை முதல்வர் பாராஹ் மசூத், இந்திய பன்னாட்டு பள்ளி தமிழ் ஆசிரியைகள் பென்சியா, பானு ஹமீது, ஆயிஷா சித்திகா, சவுதி கெசட் ராம் நாராயண் மற்றும் சமூக ஆர்வாளர்கள் அப்துல் மஜீத், ஷரீப் அப்துல் முனாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.சாதனை மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இந்திய பன்னாட்டு பள்ளி மேல் மட்ட குழு உறுப்பினர் ஹேமலதா மற்றும் மருத்துவர் ஜெயஸ்ரீ மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர் . ஜெத்தா தமிழ் சங்கம் நிர்வாகிகள் மல்லப்பன் மற்றும் முரளி மாணவ மாணவிகளை வாழ்த்தியும், ஜெத்தா தமிழ் சங்கம் எப்படி மாணாக்கர்களை ஊக்குவிக்க முயற்சிகளை எடுக்கிறார்கள் என்பதை பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோளுக்கிணங்க மரம் நடுவதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனர் .ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் சமீர்க்கு சவுதி அரசாங்கத்தின் GACA Certified Commercial Drone Pilot என்ற அனுமதி கிடைத்ததற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டனர். விழாவின் நிறைவில் இஜாஸ் அஹ்மத் நன்றியுரை நிகழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us