தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு


UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM

ADDED : ஜூன் 24, 2023 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM ADDED : ஜூன் 24, 2023 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உடலில் எந்த பகுதியில் தொடுதல் நடந்தாலும், அது அசவுகரியமாக இருந்தால் தவறு தான் என்பது குறித்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என யுனிசெப் அதிகாரி ஷியாம் சுதிர்பன்டி கூறினார்.ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் என்ற யுனிசெப் அமைப்பும், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும் இணைந்து, குழந்தைகள் உரிமைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு என்ற தலைப்பில் சென்னையில் நேற்று பயிலரங்கு நடத்தின.இதில் தகவல் தொடர்பு அதிகாரி ஷியாம் சுதிர்பன்டி பேசியதாவது:
குழந்தைகளுக்கு உயிர் வாழ்வது, வளர்ச்சி, பாதுகாப்பு, பங்கேற்பு உள்ளிட்ட, 54 வகையான உரிமைகள் உள்ளன. தாயின் வயிற்றில் கரு உருவாவதில் இருந்து, குழந்தையின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு நிகராக, ஆண் குழந்தைளுக்கும் பாலியல் சீண்டல் உள்ளது; பெரும்பாலும் உறவினர்கள், நண்பர்களால் தான் இந்த சீண்டல் நடத்தப்படுகிறது. உடலில் எந்த பகுதியாக இருந்தாலும், தொடுதல் குழந்தைகளுக்கு அசவுகரிகமாக இருந்தால், அது தவறுதான். அது பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், உணவு உள்ளிட்ட அனைத்தும் வழங்குவது நம் பொறுப்பு.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us