தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி தேர்வில் கவனம் தேவை: திருப்பூர் தினமலர் வழிகாட்டி

கல்லூரி தேர்வில் கவனம் தேவை: திருப்பூர் தினமலர் வழிகாட்டி

கல்லூரி தேர்வில் கவனம் தேவை: திருப்பூர் தினமலர் வழிகாட்டி


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 02:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 02:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச், கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனங்கள் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2023 வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.ரேங்க் தான் முக்கியம்
இன்ஜினியரிங் கவுன் சிலிங் நடைமுறை குறித்து சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன்:
 தமிழகத்தில் உள்ள, 400க்கும் அதிகமான கல்லுாரிகளின் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதிலிருந்து உங்களுக்கு விருப்பமான கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும். கல்லுாரிகள் பெயர் ஒரே மாதிரி இடம் பெற்றிருக்கும். எனவே கல்லுாரி தேர்வின் போது கல்லுாரி கோடு தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கல்லுாரி, ஒரு பாடத்தை தேர்வு செய்யாமல், பல்வேறு கல்லுாரி, வெவ்வேறு பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கான கல்லுாரிகளை தரவரிசைப்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு 1.80 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. நான்கு கட்டமாக கவுன்சிலிங் நடைபெறும். கல்லுாரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய மூன்று நாள் அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பித்து, லாக்-ஆன் செய்த பின் மாற்றம் செய்ய இயலாது.எப்போது தேர்வு செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. உங்களின் ரேங்க் தான் முக்கியம். கல்லுாரி தேர்வு செய்து இறுதி செய்து விட்டால் ஐந்து நாட்களுக்குள் கல்லுாரியில் அட்மிஷன் தொகையை செலுத்த வேண்டும். நீங்கள் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது, உங்கள் மற்றும் உங்களது பெற்றோர் ஆசை என தீர்மானித்து விட்டால், அதனை நிறைவேற்ற உறுதியெடுங்கள். வழிமுறைகளை முழுமையாக படித்துவிட்டு பதிவு செய்யுங்கள்.இவ்வாறு நாகராஜன் பேசினார்.கல்லுாரிக்கு நேரில் செல்லுங்கள்
கோவை கற்பகம் கல்வி நிறுவனங்களின், கார்ப்பரேட் ரிலேசன்ஷிப் இயக்குனர் பானு: 
ஆர்வம் எதில் உள்ளதே அந்தப் படிப்பை தேர்வு செய்யுங்கள். எங்கு படிக்கிறீர்கள், என்ன படிக்கிறீர்கள் என்பதை நேரில் சென்று தேர்வு செய்யுங்கள். நேரில் சென்றால், பல அனுபவம் கிடைக்கும். எதை படித்தாலும், ஒழுக்கமாக, நன்றாக, படிக்க வேண்டும்; நிச்சயம் வேலைவாய்ப்பு உங்களை தேடி வரும்.வேலைவாய்ப்பு ஏராளம்
கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின்: 
படிக்காமல், கஷ்டப்படாமல் வேலைவாங்கவே முடியாது. படித்தால் தான் வேலை கிடைக்கும். படிப்பே வாழ்க்கையென தீர்மானியுங்கள். எலக்ட்ரிக்கல், சிவில் இன்ஜினியரிங்கில் வரும் காலத்தில், அரசு துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. இ.சி.இ., - இ.இ.இ., படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கேட் தேர்வு எழுதுங்கள்; தேர்ச்சி பெறுங்கள்.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவருக்கு, மேல் படிப்பு படிப்பவர்கள் போட்டியாக இருப்பர். கல்லுாரியில் கற்றுக்கொண்டதை விட, பயிற்சி முக்கியம். எந்த பட்டம் படித்தாலும், எங்கே போனாலும் பிரச்னைக்கு தீர்வு காணத்தெரிய வேண்டும். 60 கேள்விகளுக்கு, 60 நிமிடங்களில் விடையளிக்கக்கூடியவரை தேர்வு செய்கிறது. உங்களின் மூளை எப்படி சிந்திக்கிறது என்பதை நிறுவனங்கள் எதிர்நோக்குகின்றன; புத்திசாலியா என்பதை தீர்மானிக்கிறது. மனப்பாடம் செய்து காலத்தை தள்ள முடியாது; புரிந்து கொள்ள வேண்டும். நல்ல படிப்பை தேர்வு செய்ய, மதிப்பெண் வாங்க, பல வலிகளை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்; தகுதியான கல்லுாரியை தேர்வு செய்யுங்கள்.பெற்றோர், வறுமையுடன் இருக்கலாம்; விபரம் இல்லாமல் இருக்கக்கூடாது. இன்ஜினியரிங் படிப்பில் போட்டி அதிகம்; நாளை படிக்கலாம் என நினைக்க வேண்டாம். இன்றே படித்து விடுங்கள்.ஜெயிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்நாள் கஷ்டமாக இருக்கக்கூடாது என்பதற்காக, பெற்றோர் பல அறிவுரைகளை வழங்குகின்றனர். ஏன் சொல்கிறார்கள், எதற்கு சொல்கிறார்கள் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். சினிமா, மொபைல்போன் என பொழுதை நகர்த்தாமல், எதிர்காலத்துக்கு, பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us