தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிமாநில குழந்தைகள் தமிழ் கற்க ஆர்வம்

வெளிமாநில குழந்தைகள் தமிழ் கற்க ஆர்வம்

வெளிமாநில குழந்தைகள் தமிழ் கற்க ஆர்வம்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 02:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 02:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறையில் உள்ள அரசுப்பள்ளிகளில், வெளிமாநில குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ் படிக்கின்றனர்.வால்பாறையில் தேயிலைத்தொழில் முக்கிய தொழிலாளாக உள்ளது. இங்குள்ள டீ எஸ்டேட்களில், தொழிலாளர்களுக்கு குறைவான கூலி வழங்கப்படுவதாலும், வனவிலங்கு மனித மோதல் அதிகரிப்பாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் வெளியேறி கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் இங்குள்ள டீ எஸ்டேட்களில், தேயிலை பறிக்க ஆள் இல்லாத நிலையில், அசாம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ் படிக்கின்றனர். குறிப்பாக வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மற்றும் நகராட்சி தொடக்கப்பள்ளிகளில், அதிக அளவில் வெளிமாநில குழந்தைகள் தமிழை ஆர்வத்துடன் படிக்கின்றனர்.வால்பாறை வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர்கள் வெள்ளியங்கிரி, பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாவது:
வால்பாறையில் மொத்தம் 85 நகராட்சி தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்தப்பள்ளியில் தற்போது 1,800 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள துவக்கப்பள்ளிகளில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கின்றனர். இவர்கள் தமிழ் படிக்கவும், வாசிக்கவும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான பள்ளி சீருடை, நோட்டு, புத்தகம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த, பள்ளிகளில் போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us