தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வளரிளம் பெண்கள் உடல் நலம்: பள்ளிக் கல்லூரிகளில் பரிசோதனை

வளரிளம் பெண்கள் உடல் நலம்: பள்ளிக் கல்லூரிகளில் பரிசோதனை

வளரிளம் பெண்கள் உடல் நலம்: பள்ளிக் கல்லூரிகளில் பரிசோதனை


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 02:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனுார்:
மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன. தற்போது 10 முதல் 19 வயது வரை உள்ள, பள்ளிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் திட்டத்தை பொது சுகாதாரத்துறை அமல்படுத்தி உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமும் வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ரத்தம், சிறுநீர், கண், இதயம் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இப்பணிகளை கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். சின்னமனுார் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் ஓடைப்பட்டி, எரசை, சின்னமனுார், குச்சனுார், குப்பனாசாரிபட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வளரிளம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். டாக்டர்கள் கூறுகையில், வளரிளம் பெண்களின் உடல் நலம் காக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை இது. இந்நல்வாய்ப்பை பள்ளிக் கல்லுாரி, கிராமப்புற ஏழை பெண்கள் பயன்படுத்தி, பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை பெற்று குணமடையலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us