UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 09:43 AM
சென்னை:
பண்டைய தமிழ்நாட்டின் வரலாற்றை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் சமஸ் தொகுத்த சோழர்கள் இன்று நுால் வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தான் வாசித்த வேகத்தில் தன்னுடைய சுற்றத்தாருக்கும் மாணவர்களுக்கும் இந்நுாலை வாங்கிப் பலரும் பரிசளிக்கின்றனர்.தனியார் நிறுவன ஊழியரான வாசகர் ராஜ விமலகுமார் நேற்று தினமலர் நாளிதழ் அலுவலகம் வந்திருந்தார். 25,000 ரூபாய்க்கு சோழர்கள் இன்று நுால் பிரதிகளை இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றுக் கொண்டார். பின், இப்படி ஒரு நுாலை வெளியிட்டதற்காக தினமலர் நிறுவனத்துக்கு வாழ்த்துகள், என வாழ்த்தி சென்றார். நுாலை வீட்டில் இருந்தபடி வாசகர்கள் வாங்க, தினமலர் நாளிதழ் ஏற்பாடு செய்துள்ளது. ஜிபே வழியே 500 ரூபாய் செலுத்தி கூரியர் வழியே பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: 75500 09565.
