தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியில் முதலிடம் நோக்கி முன்னேற்றம் : முதலமைச்சர்

கல்வியில் முதலிடம் நோக்கி முன்னேற்றம் : முதலமைச்சர்

கல்வியில் முதலிடம் நோக்கி முன்னேற்றம் : முதலமைச்சர்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கல்வியில் முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை மாநகர போலீஸ் சார்பில் அரசு பள்ளி மாணவ - மாணவியர் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் வகையில் சிற்பி எனும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதில் 2,558 மாணவர், 2,442 மாணவியர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு, சீருடைகள், யோகா, தற்காப்பு கலை, பொது அறிவு என, 40 வாரம் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. எட்டு இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகள், பயிற்சி வகுப்புகள், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் வாயிலாக சிறப்பு வகுப்புகள் எடுக்க, 12 எஸ்.ஐ.,க்களை கமிஷனர் சங்கர் ஜிவால் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட, 100 அரசு பள்ளிகளில் இருந்து, சிற்பி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் என, சிற்பி திட்டத்திற்கான கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம், 2022, செப்.,14ல், துவங்கப்பட்டது. ஓராண்டு முடிய, இன்னும் மூன்று மாதம் உள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழாவுக்கான நிகழ்ச்சி நடந்தது.சிற்பி கீதம் என்ற பாடலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சிற்பி திட்டம் வாயிலாக மாணவ - மாணவியருக்கு, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போல பயிற்சி அளித்துள்ளோம். இந்த இளம் வயதில் நீங்கள் இந்த பயிற்சி பெற்று இருப்பது, உங்கள் வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமையும். நம் நாட்டில் கல்வியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். படிப்பு ஒன்று தான் பிரிக்க முடியாத சொத்து. மாணவ - மாணவிய, படிப்பில் சிறந்து விளங்கி உலகம் போற்றும் வகையில் சாதனைகள் புரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us