UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 04:04 PM
மதுரை:
பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்களில் ஒன்றான நான் முதல்வன் - கல்லுாரி கனவு 2023 திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு, வழிகாட்டல் நிகழ்வு வழிகாட்டல் குழுவால் நடத்தப்படுகிறது.இதன்படி மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் சிறந்த கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து நான் முதல்வன் உயர்வு வழிகாட்டுதல் நிகழ்வு கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் சரவணன், ஆர்.டி.ஓ., பிர்தவ்ஸ் பாத்திமா, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பங்கேற்றனர். மேலுார், கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 370க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் கல்லுாரியில் சேர்வது குறித்தவிவரங்கள், வழிகாட்டுதல் குறித்து கலெக்டர் பேசினார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் பேசினர்.
