UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 04:12 PM
புதுச்சேரி :
புதுச்சேரி அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் தேசிய மகளிர் இன்ஜினியரிங் தின நிகழ்ச்சி நடந்தது.வேர்ல்புல் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ராணி வரவேற்றார். வேர்ல்புல் நிறுவன அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலாளர் சதாசிவம் நாராயணன், நிறுவனத்தின் சேர்த்தல் மற்றும் பன்முகத்தன்மை குறித்து பேசினார். நிறுவனத்தில் பணிபுரியும் பெண் இன்ஜினியர்கள் மேரி பிரான்சிக்கா, ருத்ரா பலராமன், அஞ்சனாதேவி ஆகியோர் நிறுவனத்தில் பெண் இன்ஜினியர்களின் பங்களிப்பை மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இன்றைய உலகில் வெற்றிகரமான பொறியாளராக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் நிறுவனத்தின் சீனியர் மேலாளர் ஸ்ரீதர் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பத்மராஜ், சாய்ராம் சுந்தரம் மற்றும் கார்த்திகேயன் செய்திருந்தனர்.
