தினமலர் படித்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்: இன்ஸ்பெக்டர் பேச்சு
தினமலர் படித்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்: இன்ஸ்பெக்டர் பேச்சு
UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 04:14 PM
தேவதானப்பட்டி:
தினமலர் நாளிதழ் படித்து உங்களை அப்டேட் செய்து கொண்டால் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெறலாம் என வழிகாட்டல் நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சங்கர் பேசினார்.தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கலைஅறிவியல் கல்லூரியில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி டி.எஸ்.பி.,கீதா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம், தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஜோதிபாசு, அன்னமயில், வைரமணி மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார்கள் மற்றும் எஸ்.ஐ., தேர்வு எழுத உள்ள 70 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் பேசுகையில், எஸ்.ஐ., தேர்விற்கு தயாராவோர் தினசரி நாளிதழ்களை படியுங்கள். குறிப்பாக தினமலர் நாளிதழ் படித்து உங்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதில் கருத்தாழமிக்க ஏராளமான தகவல்கள் உள்ளன. தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருக்கும். தன்னம்பிக்கை, உழைப்புடன் செயல்பட்டால் எஸ்.ஐ., வேலை உங்களுக்கு சாத்தியமே என்றார்.
