UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 09:48 AM
அ நிறம் | அளவு
திருத்தணி:
திருத்தணி ஒன்றியத்தில் 98 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் இருந்த வட்டார கல்வி அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், தற்காலிகமாக திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக அறையில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. புதிய வட்டார கல்வி அலுவலகம் கட்டுவதற்கு, திருத்தணி வருவாய் துறை 17 சென்ட் நிலம் வழங்கியுள்ளது. இது குறித்து திருத்தணி வட்டார கல்வி அலுவலர் சலபதி கூறுகையில், வருவாய்த் துறை வழங்கிய நிலத்திற்கு பட்டா பெற்று, விரைவில் புதிய வட்டார கல்வி அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
