தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு


UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM

ADDED : ஜூன் 29, 2023 09:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM ADDED : ஜூன் 29, 2023 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளால், கோவை மாநகராட்சி பள்ளிகளில் இவ்வாண்டு 5,990 மாணவ - மாணவியர் கூடுதலாக சேர்க்கை புரிந்துள்ளனர். பல மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது.கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 42 துவக்கப்பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும், 17 மேல்நிலைப்பள்ளிகள் என 84 மாநகராட்சி பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தவிர 1,400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 92 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுவதுடன் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வித்தரத்தை மேம்படுத்த ஆறு பள்ளிகளில், 1.20 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் இந்நிதியாண்டில் அமைக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை போன்ற கூடுதல் அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால், மாநகராட்சி பள்ளிகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. நடப்பு, 2023-24ம் கல்வியாண்டில், 3,263 மாணவியர், 2,727 மாணவர்கள் என, 5,990 பேர் மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கை புரிந்துள்ளனர்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:
ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி, மசக்காளிபாளையம் உள்ளிட்ட பள்ளிகளில் டிமாண்ட் அதிகம். மாணவர்களிடையே போட்டி அதிகம் காணப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதால், மாணவர்கள் சேர்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கணபதி பள்ளி ஒன்றில், 18 மாணவர்களே இருந்தனர்; வகுப்பறை கட்டியபின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.மாநகராட்சி பள்ளிகளில், 70 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே, ஆசிரியர்கள் வர வேண்டியுள்ளது. எனவே, பள்ளி கண்காணிப்பு குழு வாயிலாக, டெட் முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க இருக்கிறோம். இவர்களுக்கு கல்வி நிதியில் ஊதியம் வழங்கப்படும். இக்குழுவில் தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர் இடம்பெறுவர். மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க இக்குழுவினர் நேர்காணல் நடத்தி விரைவில் ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us