தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக் கட்டடத்தில் விரிசல் ஆய்வுக்கு வந்த எம்.எல்.ஏ., அதிர்ச்சி

பள்ளிக் கட்டடத்தில் விரிசல் ஆய்வுக்கு வந்த எம்.எல்.ஏ., அதிர்ச்சி

பள்ளிக் கட்டடத்தில் விரிசல் ஆய்வுக்கு வந்த எம்.எல்.ஏ., அதிர்ச்சி


UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM

ADDED : ஜூன் 29, 2023 09:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM ADDED : ஜூன் 29, 2023 09:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:
செல்லம்பட்டி பன்னியான் கள்ளர் பள்ளியில் பயன்பாட்டுக்கு வரும்முன்பே வகுப்பறை சுவரில் விரிசல் விழுந்ததால் ஆய்வுக்கு வந்த எம்.எல்.ஏ., அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார்.செல்லம்பட்டி ஒன்றியம் பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு இட வசதி இல்லாததால் கடந்த கல்வி ஆண்டில் கூடுதல் வகுப்பறை கட்ட நபார்டு வங்கி மூலம் ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கி 3 வகுப்பறைகள் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து மார்ச்சில் பொதுப்பணித்துறை கட்டடத்தை ஒப்படைத்தது. இதன் ஒரு அறையில் கடந்த வாரம் முதல் வகுப்பு நடக்கிறது. மற்றொரு அறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க எம்.எல்.ஏ., அய்யப்பனிடம் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ., நேற்று பள்ளியை பார்வையிட வந்தார். புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை பார்த்த போது கட்டடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பயன்பாட்டுக்கு வருமுன்பே கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர் கூறியதாவது: 
உசிலம்பட்டி சட்டசபையில் 10க்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தேன். தரமான கம்பி, மண், சிமென்ட் பயன்படுத்தவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடந்த டிசம்பரில் கடிதம் எழுதியிருந்தேன். அதனையடுத்து செயற்பொறியாளரிடம் இருந்து அனைத்தும் தரமான முறையில் கட்டப்பட்டதாக பதில் வந்துள்ளது.இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் கேட்டதால், ஆய்வுக்கு வந்தபோது சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 6 மாதத்தில் 90 சதவீதம் பழுதடைந்து விடும். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளேன். நடவடிக்கை இல்லையெனில் நீதிமன்றத்தை அணுகுவேன், என்றார். பன்னியான் ஊராட்சி தலைவர் காசிநாதன் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us