UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 03:47 AM
பெங்களூரு:
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்கிறது. பள்ளி, கல்லுாரிகளில் மாணவ - மாணவியர் ஆரோக்கியத்தில், கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, சுகாதாரத் துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
கர்நாடகாவின் பல மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. சூழ்நிலை மாறுவதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாணவ - மாணவியர் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். கேரளாவில் சிக்குன் குனியா, டெங்கு, பறவை காய்ச்சல் அதிகரிக்கிறது. தினமும் 10 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சேருகின்றனர். எனவே, கர்நாடகா பள்ளி, கல்லுாரிகளில் மாணவ - மாணவியர் உடல் ஆரோக்கியத்தில், கவனம் செலுத்த வேண்டும். பெங்களூரு, தட்சிண கன்னடா, குடகு, உடுப்பி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியம். நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதுவும் நோய்கள் பரவ காரணமாக இருக்கும். எனவே பள்ளி, கல்லுாரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
