தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியில் இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன் பேச்சு

கல்வியில் இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன் பேச்சு

கல்வியில் இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன் பேச்சு


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 03:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, பல்லாவரம் வேல்ஸ் பல்கலையின், 13வது பட்டமளிப்பு விழா, நேற்று மாலை நடந்தது. பல்கலை வேந்தர் ஐசரி கே.கணேஷ் தலைமை வகித்தார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா கல்வியில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு பல்கலை உருவாகுகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு ஐ.டி.ஐ., உருவாகிறது. நாட்டில், 2014ம் ஆண்டு வரை, 720 பல்கலைகள் இருந்தன; தற்போது 1113 பல்கலைகள் உள்ளன. அதேபோல் 2014ம் ஆண்டு வரை 51,348 மருத்துவ படிப்பு இடங்கள் இருந்தன. தற்போது 99,763 மருத்துவ சீட் உள்ளன. 387 ஆக இருந்த மருத்துவ கல்லுாரிகள், தற்போது 700 ஆக அதிகரித்துள்ளன. இந்தியாவில், மாணவர்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 2024ம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்தியா செல்வதற்கான ஒப்பந்தம், நாசா- இஸ்ரோ இடையே ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், ஆர்.எம்.கே., கல்வி குழுமத் தலைவர் முனிரத்தினம், ப்ரஸ் ஒர்க் நிறுவனத்தின் உரிமையாளர் கிரீஷ் மாத்ருபூதம், ஹிந்துஸ்தான் மருத்துவமனை சிறுநீரகவியல் பேராசிரியர் ராமலிங்கம், இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகிய நான்கு பேருக்கு, சிறப்பு டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 75 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், 169 மாணவர்களுக்கு பி.எச்.டி., பட்டம் என, 4,305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலை இணை வேந்தர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் குழுமத் துணை தலைவர் ப்ரீத்தா கணேஷ் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us