UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM
ADDED : ஜூலை 01, 2023 06:14 AM
சென்னை:
இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கிய ஓட்டம் ஆறாவது மாதத்தை எட்டியது.அவர் கூறியதாவது:
ஆங்கில புத்தாண்டின் தொடக்கமான (ஜனவரி 1) முதல் இந்த ஆண்டின் இறுதி வரை இளைஞர்களிடையே உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், என் உடல்நலனை பேனவும் 8760(365x24) மணிநேரத்தில் 500 மணி நேரம் ஓடுவதற்கும் நடப்பதற்குமாக ஒதுக்க முடிவு செய்து உறுதியேற்கிறேன். இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 8760 மணி நேரத்தில் 500 மணி நேரம் நடக்கவும் ஓடவும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. சரியாக ஆறு மாதங்கள் இன்றோடு நிறைவுறும் நிலையில் 253 மணி நேரம் முடிவுற்றுள்ளது. நீங்களும் முயற்சித்து பாருங்களேன். என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
