தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ தினம்... எப்படி வந்தது?

மருத்துவ தினம்... எப்படி வந்தது?

மருத்துவ தினம்... எப்படி வந்தது?


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகின் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நாளை மருத்துவ தினமாக கடைபிடிக்கின்றன. அந்தந்த நாடுகளில் மருத்தவத்துக்காக தியாகம் செய்தவர்கள், அளப்பரிய சேவையாற்றியவர்களின் நினைவாக, மருத்துவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி நம் நாட்டில் ஜூலை 1ல் மருத்துவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882 ஜூலை 1ல் பிறந்தவர் பி.சி.ராய் என்கிற டாக்டர் பிதான் சந்திரா ராய். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். மருத்துவப்பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நாட்டு விடுதலைக்காக, மகாத்மா காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்திலும் பங்கு பெற்றவர். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர். அப்போதும் கூட ஏழைகளுக்காக இலவச மருத்துவம் செய்தவர். தன் வீட்டையே ஏழைகளுக்காக மருத்துவமனை கட்ட வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 196, ஜூலை 1 (அவரது பிறந்த தினம்) அன்று மறைந்தார். அவரது நினைவாகத்தான் இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை 1ல் மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1976ல் அவரது நினைவாக மருத்துவம், அறிவியல், பொது விவகாரம், கலை, இலக்கிய துறைகளில் சிறப்புற பணிபுரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us