தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலக்கிய போட்டி; மாணவர்கள் ஆர்வம்

இலக்கிய போட்டி; மாணவர்கள் ஆர்வம்

இலக்கிய போட்டி; மாணவர்கள் ஆர்வம்


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 03:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022-23ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான இலக்கிய போட்டி, எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் இன்று நடந்தது.துணை இயக்குனர் புவனேஸ்வரி போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளிகளை சேர்ந்த 182 மணவ, மாணவியர் பங்கேற்றனர். கவிதை போட்டியில் கருவலுார் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி செல்வி; திருப்பூர் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி தர்ஷினி; பொல்லிக்காளிபாளையம் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி வினோதா முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். கட்டுரை போட்டியில், குமார்நகர் மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவி யோகதர்ஷணா; உடுமலை பாரதியார் நினைவு அரசு பள்ளி பிளஸ் 1 மாணவி சுஜித்ரா; திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி தரணிகா, முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.பேச்சுப்போட்டியில், காங்கயம் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி; குடிமங்கலம் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி யாழினி; பெருமாநல்லுார் அரசு பள்ளி மாணவன் நித்திஷ்வரன் ஆகியோர், முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். மாவட்ட அளவில் நடந்த கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய் ரொக்கப்பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us