தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - வழிகாட்டி நிகழ்ச்சியில் குவிந்த மாணவர்கள்!

தினமலர் - வழிகாட்டி நிகழ்ச்சியில் குவிந்த மாணவர்கள்!

தினமலர் - வழிகாட்டி நிகழ்ச்சியில் குவிந்த மாணவர்கள்!


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 07:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்வதற்கு வழிகாட்டும் வகையில், தினமலர் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி- 2023&' எனும் நிகழ்ச்சி போரூரை அடுத்த குன்றத்துார் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 வரை நடந்தது.பஸ் வசதி
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் வசதிக்காக, குன்றத்துார் பஸ் நிலையத்தில் இருந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டனர்.அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் இயக்குனர் நாகராஜன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து பேசியதாவது:
கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளை சரியாக தேர்வு செய்வது முக்கியம். கவுன்சிலிங் நான்கு சுற்றுகள் நடக்கும். மாணவர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து, கவுன்சிலிங் நடத்தப்படும். ஒவ்வொருவரும், எந்த சுற்றில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோ, அந்த சுற்றில் மட்டுமே பங்கேற்க முடியும். விண்ணப்பம் பதிவு செய்தபோது, கொடுக்கப்பட்ட, ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை மறந்து விடக் கூடாது. கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கு மூன்று நாட்கள் அவகாசம் உண்டு. அந்த அவகாசத்தில் எப்படி வேண்டுமானாலும் தேர்வை மாற்றிக் கொள்ளலாம். எத்தனை தேர்வு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூன்றாவது நாளில், இறுதி செய்ய வேண்டும். ஒரு முறை இறுதி செய்து விட்டால், மாற்ற முடியாது. நான்காவது நாள் காலையில், டென்டேடிவ் அலாட்மென்ட் வரும். அதை இறுதி செய்ய, இரண்டு நாள் அவகாசம் உண்டு. இரண்டு நாளில் உறுதி செய்யவில்லை எனில், ரத்தாகி விடும். ஒதுக்கீட்டில் எந்த கல்லுாரி தேர்வு செய்யப்பட்டதோ, அந்த கல்லுாரிக்கு சென்று, சீட் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், இரண்டாவது தேர்வில் ஒதுக்கீடு ஆன மாணவர்கள், டி.எப்.சி.,க்கு சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லுாரிகளை தேர்வு செய்யும்போது, அவற்றின் குறியீடு மிக முக்கியம். அதே நேரத்தில், இந்த கல்லுாரி, இந்த பாடப்பிரிவு கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். கல்லுாரிகளின் தரவரிசை, கட்- ஆப் அடிப்படையில் இடம் கிடைக்கும். மதிப்பெண் அடிப்படையில் தான், சீட் கிடைக்கும். இன்ஜினியரிங் படித்தால், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், பொறியாளர், தொழில் முனைவோர்ஆகலாம்.இவ்வாறு அவர் பேசினார்.கல்வி ஆலோசகர் அஸ்வின்,வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் குறித்துவழங்கிய ஆலோசனை:
மாணவர்களுக்கு சிறந்த கல்லுாரியில் சீட் கிடைத்து, வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே, இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கல்லுாரிகளை தேர்வு செய்யும்போது கவனம் தேவை. நமக்கு எல்லாம் தெரியும் என நினைத்து, தரம் குறைவான கல்லுாரிகளில் சேர்ந்துவிடாதீர்கள். ஒரு பிரச்னைக்கு தீர்வு கொடுப்பது, பொறியியல் படிப்பு தான். இன்ஜினியர்களை வைத்து, மருத்துவர்கள் பிழைப்பு நடத்தும் சூழல் வரும். தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இதனால், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு பொருளை கழற்றி போடுவது, புத்திசாலித்தனம் இல்லை. கழற்றிய பொருட்களை மீண்டும் பொருத்தி, ஓட வைப்பதே புத்திசாலித்தனம். எந்த பணிக்கு சென்றாலும், பிரச்னையை சிந்தித்து தீர்வு காணும் திறமை உள்ளதா என ஆராய்வர்.மனக்கணக்கு போடுபவர்கள், வாழ்க்கையில் சிறப்பாக இருப்பர். இன்ஜினியரிங் படிப்பது முக்கியமில்லை, ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பது, புதுவிதமாக சிந்திப்பது, இந்த இரண்டும் முக்கியம். கணிணி அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு, ஏகப்பட்ட போட்டி உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் படித்தால் தான் வேலை உண்டு. கணினி அறிவியல் மாணவர்கள், படிப்போடு, பயிற்சியையும் வளர்த்துக் கொண்டால் முன்னேற முடியும். பல பெரிய நிறுவனங்கள், திறமையானவர்களை தேடுகின்றன. எந்த கல்லுாரி, மாணவர்களுக்காக தொழிற்சாலையை உருவாக்கி, அதே தொழிற்சாலையில் மாணவர்களுக்கு வேலை கொடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நிறுவனங்களில் தேர்வு ஆவது முக்கியமில்லை; அந்த நிறுவனத்தில் நிலைத்து பணியாற்றுவதே முக்கியம். சரியான கல்லுாரிகளை தேர்வு செய்து படித்து, திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமை, கடின உழைப்பு இருந்தால் வெற்றிப் பெறலாம். வாழ்க்கையில், புத்தகத்தையும், பெற்றோரையும் மதிப்பவர்கள் ஜெயிப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் ரமேஷ், திறன் வளர்ப்பு குறித்து பேசியதாவது:
கல்லுாரி தேர்வு மிக முக்கியம். எந்த பாடப் பிரிவு தேர்வு செய்கிறோம் என்பதை பொருத்தே, நல்ல கல்லுாரிகள் கிடைக்கும். நல்ல பாடப் பிரிவை எடுத்து படித்து, தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டால், எதிர்காலம்சிறப்பாக இருக்கும். பொறியியல் துறை, சிறந்த வேலை வாய்ப்புகளை தருகிறது. தொழில்நுட்பம், ஆளுமை இந்த இரண்டும், சிறந்த பொறியாளர்களாக உருவாக்கும். தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் வசதி உள்ளதா என பார்த்து, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அண்ணா நகர்
அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஜூனியர் கல்லுாரியில், நேற்று மாலை 3:00 மணிக்கு நடந்த, வழிகாட்டி நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் இயக்குனர் டாக்டர் நாகராஜன், பொறியியல் கவுன்சிலிங் நடை முறைகள் குறித்து, ஒவ்வொரு படிநிலையாக மிக விரிவாக, திரைக் காட்சிகளுடன் விளக்கினார். இதைத் தொடர்ந்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் டாக்டர் ரமேஷ், பொறியியில் படிக்கும் மாணவர்கள் திறனை மேம்படுத்தி கொள்வது குறித்தும், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார். இறுதியாக கல்வி ஆலோசகர் அஸ்வின், பொறியியல் படிப்பில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்உள்ளிட்ட தகவல்கள் குறித்து நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us