தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வர் கோப்பை: கபடியில் சென்னை, செங்கை அபாரம்

முதல்வர் கோப்பை: கபடியில் சென்னை, செங்கை அபாரம்

முதல்வர் கோப்பை: கபடியில் சென்னை, செங்கை அபாரம்


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் 17 இடங்களில் முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகள்  துவங்கின. 38 மாவட்ட இருபாலர் அணிகள் பங்கேற்று உள்ளன.முதல் நாளில் பள்ளி மாணவர்களுக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தன. கீழ்ப்பாக்கம் நேரு பார்க்கில் நடந்த சிறுமியருக்கான கபடியில், சென்னை அணி 56 - 32 என்ற கணக்கில் நாகை அணியையும், திருச்சி அணி 29 - 28 என்ற கணக்கில் மதுரையையும் வீழ்த்தின. சிறுவர்களுக்கான போட்டியில், ராணிப்பேட்டை அணி 32 - 43 என்ற கணக்கில் கள்ளக்குறிச்சியை வென்றது; துாத்துக்குடி 39 - 21 கணக்கில் நாமக்கல் அணியை தோற்கடித்தது. பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்த வாலிபாலில், சிறுவர்களில் திருப்பத்துார் அணி 2 - 0 என்ற செட் கணக்கில் சிவகங்கையையும், தஞ்சை 2 - 0 செட் கணக்கில் துாத்துக்குடியையும் வீழ்த்தின. சிறுமியரில் வேலுார் 2 - 0 செட் கணக்கில் சிவகங்கையையும், நீலகிரி 2 - 1 என்ற செட் கணக்கில் காஞ்சிபுரம் அணியையும், மயிலாடுதுறை 2 - 0 செட் கணக்கில் திருச்சியையும் தோற்கடித்தன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us